டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2A முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஜெயகுமார், ஓம் காந்தன் இருவரையும் சிபிசிஐடியினர் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களுக்கு அழைத்துச் சென்று தேர்வுத் தாளில் முறைகேடு செய்தது குறித்து செயல்முறை விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்வரன் (36), உத்திரமேரூரில் கிராம நிர்வாக அலுவலகராகப் பணிபுரியும் வசந்தகுமார் என்ற இடைத்தரகர் மூலம் முக்கிய குற்றவாளி ஜெயகுமாரிடம் ரூ.12 லட்சம் கொடுத்து தேர்வில் முறைகேடு செய்து வணிக வரித்துறை அலுலகத்தில் உதவியாளராக சேர்ந்திருப்பது தெரியவந்தது.