இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கையில், "அருங்காட்சியகத்துறையில் பொறுப்பாளர் பணிக்கான தேர்வை வரும் மே.19ஆம் தேதியன்று நடத்துவதாக அறிவித்திருந்தது. ஆனால், இந்திய தேர்தல் ஆணையம், சட்டப்பேரவை இடைத்தேர்தலை வரும் மே.19ம் தேதியன்று அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் நடத்துவதாக அறிவித்தது.
இடைத்தேர்தலால் டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம் - சட்டப்பேரவை இடைத்தேர்தல்
சென்னை: சட்டப்பேரவை இடைத்தேர்தலால் மே 19ஆம் தேதி நடக்கவிருந்த அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு
எனவே, தேர்தலை கருத்தில் கொண்டும், ஒரு சில நிர்வாக காரணங்களுக்காகவும் எழுத்து தேர்வை வரும் மே.25 ஆம் தேதியன்று நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இந்த தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 3 தேர்வு மையங்களில் நடைபெறும்' என்று கூறப்பட்டுள்ளது.