சென்னை:ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிக்கான தேர்வு, வருகின்ற செப்., 18ஆம் தேதி நடைபெறும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி அன்று நடத்தப்படவிருந்த ஒருங்கிணணந்த பாெறியியல் சார்நிலை பணிகள் அடங்கிய பதவிகளுக்கான தேர்வானது, கரோனா பெருந்தொற்று காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.