தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்

சென்னை: குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்து சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குரூப்2ஏ தேர்வு முறைகேடு
குரூப்2ஏ தேர்வு முறைகேடு

By

Published : Feb 3, 2020, 7:45 PM IST

2017ஆம் ஆண்டு நடந்த குரூப்2 ஏ தேர்வு ஓ.எம்.ஆர் தாளில் குறியீடுகளைப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தரகரிடம் பணம் செலுத்திய தேர்வர்கள், அவர்கள் அளித்த அறிவுரையின்படி ஓ.எம்.ஆர் தேர்வுத் தாளில் முதல் 20 வினாக்களுக்கு மட்டுமே பதிலளித்துள்ளனர்.

பின்னர், மீதமுள்ள வினாக்களுக்கு, தேர்வர்களின் விடைதாள்களைக் கொண்டு செல்லும் வழியில் இடைத்தரகர்கள் பதிலளித்துள்ளனர். ஆனால், 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஓ.எம்.ஆர் தாளில் எத்தனை வினாக்களுக்கு விடை குறிப்பிட்டுள்ளது என்பதை, கீழே குறிப்பிடுவது போல் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதனால், குரூப் 4 தேர்வில் தங்களது மூளையை கசக்கித் திட்டம் தீட்டிய இடைத்தரகர்கள், தேர்வர்களை சிறிது நேரத்தில் அழியக்கூடிய பேனாவை பயன்படுத்தி விடையளிக்கக் கூறி, சிறிது நேரத்திற்குப் பிறகு இடைத்தரகர்கள் விடையை மாற்றியமைத்துள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:‘டிஎன்பிஎஸ்சி முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று ஜெயக்குமார் பதவி விலக வேண்டும்’

ABOUT THE AUTHOR

...view details