தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரூப் -4 தட்டச்சர் பணி நியமன ஆணை! - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தட்டச்சர் பணி நியமன ஒதுக்கீடு ஆணையை தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் வழங்கினார்.

appointment order for  typist posting
appointment order for typist posting

By

Published : Nov 2, 2020, 9:26 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப்- IV தேர்வு எழுத்தேர்வு கடந்த 01.09.19 அன்று நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வு கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தப் பதவிக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்றைய கலந்தாய்வில் துறை ஒதுக்கீட்டுக்கான ஆணையை, தேர்வாணைய தலைவர் கா. பாலச்சந்திரன் தேர்வர்களுக்கு வழங்கினார். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இரண்டாயித்து 839 தட்டச்சர் பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details