தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TNPSC Group 2 Update: குரூப்-2 தேர்வில் விடைத்தாள் குளறுபடி; தேர்வு நேரத்தில் மாற்றம்! - tnpsc latest news

குரூப்-2 தேர்வில் சில மையங்களில் விடைத்தாள், பதிவெண் வரிசையில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக மதியம் நடைபெறவுள்ள தேர்வு 2.30 மணிக்கு துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 25, 2023, 12:27 PM IST

சென்னை:குரூப்-2 தேர்வில் சில மையங்களில் விடைத்தாள், பதிவெண் வரிசையில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக மதியம் நடைபெறவுள்ள தேர்வு 2.30 மணிக்கு துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்-2 முதன்மை எழுத்துத் தேர்வு இன்று(25.02.2023) 20 மாவட்டங்களில் நடைபெறுகிறது. வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.தற்போது அந்த நிலைமை சரிசெய்யப்பட்டு, தேர்வு அனைத்து இடங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. இந்த கால தாமதத்தை ஈடு செய்யும் வகையில் மதிய தேர்வு 2.30 மணிக்கு துவங்கி 5.30 மணி வரை நடைபெறும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி செய்திக்குறிப்பு

இதையும் படிங்க: TNPSC group 2: குரூப்-2 தேர்வில் குளறுபடி.. மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details