தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் பி. உமா மகேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
1. தேர்வாணையத்தால் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 (தொகுதி 1)-இல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களில், தங்களது இணையவழி விண்ணப்பத்தில், தமிழ் வழியில் பயின்றுள்ளதாகத் தெரிவித்துள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும், தமிழ் வழியில் பயின்ற சான்றிதழை (PSTM Certificate) பெறுவதற்கான படிவங்கள், தேர்வாணைய இணையதளத்தில் கீழ்க்காணும் தரவுகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
- நியமனம் --> அறிவிக்கை --> விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்
- படிவங்கள் மற்றும் பதிவிறக்கங்கள் --> விண்ணப்பதாரர் தொடர்பான படிவங்கள் --> தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் படிவம் (வரிசை எண். 6)
2. விண்ணப்பதாரர்கள், இப்படிவங்களைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதோடு, புதிய வடிவத்தில் உள்ள தமிழ் வழியில் பயின்ற சான்றிதழை (PSTM Certificate) உரிய அலுவலரிடமிருந்து பெற்று 100 KB முதல் 200 KB வரை ஸ்கேன் செய்து அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.