கரோனோ நோய் பரவலையடுத்து ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவிருந்த தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. மேலும் மார்ச் மாதம் 25, 26ஆம் தேதிகளில் நடைபெற இருந்த சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர், துணை கண்காணிப்பாளர் தேர்வும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏப்ரல் மாதம் குரூப் 1தேர்வுகள் நடைபெறும் அறிவித்திருந்த சூழலில் அந்தத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு 22 தேர்வுகள் நடைபெறுவதற்கான கால அட்டவணையும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் திட்டமிட்டப்பட தேர்வுகள் குறித்த அறிவிப்பிணையோ அல்லது தேர்வுகளை நடத்த இயலாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு அரசு பணியாளர் தேர்வாணையம் 30 தேர்வுகள் நடத்தி 10ஆயிரம் வேலை வாய்ப்பினை ஏற்ப்படுத்தியது.