தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான தற்காலிக பாண்டு முறையை ரத்து செய்க - தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் - today latest news

Non service PG Doctors: தமிழ்நாட்டில் முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உள்ள தற்காலிக பாண்டு முறையை ரத்து செய்து விட்டு, காலியாக உள்ள இடங்களை நிரந்தரமாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

Non service PG Doctors
முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான தற்காலிக பாண்டு முறையை ரத்து செய்ய வலியுறுத்தல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 8:59 PM IST

சென்னை:தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தின் தலைவர் கீர்த்தி வர்மன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டு இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற செய்தி மருத்துவர்களை மட்டும் அல்ல, மக்களையும் இதற்கு என்ன காரணம் என்று கேள்வி கேட்க வைத்திருக்கிறது.

ஏற்கனவே, 2022இல் இருந்து 19 (1) விதிகள் மூலமாக Non-service PG சேர்க்கை நடைபெறுவதால், முதுகலைப் பட்டம் (MD/MS) படித்த இளம் மருத்துவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைப்பதே சாத்தியம் இல்லாமல் தமிழ்நாடு அரசு செய்து இருக்கிறது. கடந்த 3 வருடத்தில் கிட்டத்தட்ட மருத்துவருக்கு நிரந்தர அரசு வேலைவாய்ப்பு முற்றிலும் கிடைக்கவில்லை.

இதில் 19 (1) விதிகள் மூலமாக நடைபெறும் சேர்க்கை "HIRE AND FIRE" என்ற கொள்கை போன்று உள்ளதால், இளம் மருத்துவர்களின் உழைப்பைச் சுரண்டி வருகிறது அரசு. இதனால், இளம் மருத்துவர்கள் ஏன் மருத்துவப் படிப்பில் சேர்ந்தோம் என்று நினைக்கிறார்கள். எனவே, தற்காலிக பாண்டு (Temporary BOND) திட்டத்தை அரசு முற்றிலும் கைவிட வேண்டும்.

அப்போதுதான் இளம் மருத்துவர்களுக்கும், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாணவர்களுக்கும் நல்ல வாய்ப்பை உருவாக்க முடியும். ஒரு முதுநிலை (MD/MS) மருத்துவர் உருவாக அரசு செலவு செய்கிறது. அதனால் நாங்கள் Temporary BOND திட்டத்தின் மூலமாக உழைப்புச் சுரண்டல் பண்ணுவோம் என்று அரசு நினைத்தால், ஒரே ஒரு கேள்வி. சட்டப் படிப்பு, கலை அறிவியல் படிப்பு மற்றும் பொறியியல் படிப்பு படித்தவர்களுக்கு ஏன் இந்த திட்டம் இல்லை? IIT, AIIMS, JIPMER போன்ற நிறுவனங்களில் ஏன் இல்லை என்று கேள்விகளை எழுப்பினார்.

மேலும், நிரந்தரத் தேர்வு வைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவரை நியமிப்பதுதான் சரியான தீர்வு. MD/MS படித்த Non-service PG மருத்துவர்களை வைத்து தற்காலிகமாக உழைப்புச் சுரண்டல் செய்யக்கூடாது. நான் அரசுக்கு எதிராகப் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் இதைப் பதிவிடவில்லை.

'Non-service PG Temporary BOND system' முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். நிரந்தர வேலைவாய்ப்பை அரசு உருவாக்க வேண்டும். நோயாளி எண்ணிக்கையின் அடிப்படையில் மருத்துவர்களின் வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும். மருத்துவர்களுக்குப் பணிச்சுமை இல்லாமல் வேலை செய்யும் சூழலை உருவாக்க வேண்டும். இல்லை, இது தவறு என்றால் அரசு இதற்குப் பதில் சொல்ல வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"மனிதாபிமானத்தை மையமாக கொண்டுதான் அடுத்த படமும் இருக்கும்" - அயோத்தி பட இயக்குநர்

ABOUT THE AUTHOR

...view details