தமிழ்நாடு மின்வாரியத் துறை ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் மின் விநியோக வட்டங்கள், அனல், புனல் மின்சார உற்பத்தி நிலையங்கள், பொது நிர்மான வட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக் கோரி தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகம் அருகே கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிரந்தர பணி நியமனம் வழங்காதது ஏன் - மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு கேள்வி! - மின் வாரிய தலைமை அலுவலகம்
சென்னை : மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தரமாக பணி வழங்க வேண்டும் என கூறி, மின் வாரிய தலைமை அலுவலகம் அருகே கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அச்சக்கத்தின் பொதுச்செயலாளர் சேக்கிழார், ’பல ஆண்டுகளாக கடைநிலை முதல் அனைத்து பணிகளிலும் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் மூலமாக மட்டுமே கஜா புயல், தானே புயல் உள்ளிட்ட அனைத்து இயற்கை பேரிடர் காலங்களிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்களை பணி நிரந்தரப்படுத்த மின்வாரியம் முன் வரவில்லை. ஒப்பந்த ஊழியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதால் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்துவது குறித்து ஆலோசிக்க எங்களை அழைத்துப் பேச அரசு முன்வர வேண்டும்’ என்றார்.