தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் துறையில் காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு! - TNEB Application for Field Assistant posts

சென்னை: தமிழ்நாடு மின் துறையில் காலியாக உள்ள 2900 கள உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNEB Vacancy  TNEB Job Recuirtment  TNEB Job Notification  தமிழ்நாடு மின் துறை அறிவிப்பு  கள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம்  தமிழ்நாடு மின் துறை வேலை வாய்ப்பு  Tamil Nadu Electricity Department Announcement  TNEB Application for Field Assistant posts  Tamil Nadu Electricity Sector Job Opportunity
Tamil Nadu Electricity Department Announcement

By

Published : Feb 12, 2021, 9:13 PM IST

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2900 கள உதவியாளர் (பயிற்சி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் பொருட்டு அறிவிக்கை எண் 5, கடந்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியிடப்பட்டு மார்ச் 24ஆம் தேதி முதல் இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு விண்ணப்பம் பெறப்படும் தேதியானது மறு தேதி அறிவிக்காமல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, அரசால் அறிவிக்கப்பட்ட தடைகளில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால், கள உதவியாளர் (பயிற்சி) பணி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் இணைய வழி மூலமாக பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 16ஆம் தேதிவரை பெறப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல், அறிவிப்பு எண் 3, மூலம் கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்ட 500 இளநிலை உதவியாளர், கணக்குப் பதவிக்கு மே 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் கணினி வழி தேர்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும், அவரவர் மின்னஞ்சல் முகவரியையும் பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க:2,098 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details