தமிழ்நாடு மின்சாரத் துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலிலிருந்து வருகிறது. தற்போது, நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு! - june 6 last date for pay electricity bill
சென்னை: தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்துவதற்கான கடைசி தேதியை நீட்டித்து, புதிய தேதியை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்சார வாரியம்
அதன்படி, மார்ச் 25ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரையிலான மின் கட்டணத்தை தாழ்வழுத்த நுகர்வோர்கள், ஜூன் 6ஆம் தேதி வரை தாமதக் கட்டணம் மற்றும் மறு மின் இணைப்புக் கட்டணமின்றி செலுத்தலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஏற்றுமதி வாய்ப்புகள், வியாபாரம் துவங்குதல் குறித்து இணையவழி கருத்தரங்கு, பயிற்சி வகுப்பு - தமிழக அரசு