தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் படிப்பில் 500 இடங்களில் விளையாட்டு பிரிவிற்கு சான்றிதழ் சரிபார்ப்பு - பொறியியல் படிப்பில் சேர சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டில் விளையாட்டுப் பிரிவில் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த 2,442 வீரர்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையில் சான்றிதழ் சரிபார்ப்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.

பொறியியல் படிப்பில் சேர விளையாட்டு பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்
பொறியியல் படிப்பில் சேர விளையாட்டு பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

By

Published : Jul 22, 2022, 5:14 PM IST

சென்னை:பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் 2022-23 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பாெறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் ஜூன் 20 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 21 ஆம் தேதி மாலை 6 மணி வரையில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 943 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 346 மாணவர்கள் கட்டணங்களை செலுத்தி உள்ளனர். 1 லட்சத்து 26 ஆயிரத்து 365 மாணவர்கள் சான்றிதழ்களை முழுவதுமாக பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த 2,442 வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. மாணவர்கள் தங்களின் அசல் விளையாட்டு சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்த்து செல்ல வேண்டும்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த விளையாட்டு வீரர்களுக்கு 2 ஆம் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூலை 26 ஆம் தேதி வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details