தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்புப் பிரிவு ஒதுக்கீட்டில் 6,653 இடங்களில் 497 இடங்கள் மட்டுமே தேர்வு! - special engineering reservation

பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டில் உள்ள 6,653 இடங்களில் 497 இடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதால் 6,653 இடங்கள் காலியாக உள்ளன.

be admission special reservation
சிறப்புப் பிரிவு ஒதுக்கீட்டில் 6,653 இடங்களில் 497 இடங்கள் மட்டுமே தேர்வு

By

Published : Oct 7, 2020, 12:22 PM IST

சென்னை:பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் படிப்பில் சேர மொத்தம் காலியாக உள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்களுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவுகளை 3,4ஆம் தேதிகளில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில், 721 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான ஒதுக்கீடு பிரிவில் 363 மாணவர்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 148 பேரும் தாங்கள் விரும்பும் கல்லூரிகள் மற்றும் இடங்களைப் பதிவு செய்திருந்தனர்.

சிறப்பு பிரிவினருக்கான தற்காலிக ஒதுக்கீடு www.tneaonline.org என்ற இணையதளத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டில் 150 இடங்களில் 134 மாணவர்கள் விரும்பிய கல்லூரி, பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் உள்ள 6 ஆயிரத்து 500 இடங்களில் 107 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. விளையாட்டுப் பிரிவு 500 இடங்களில் 357 இடங்களை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக ஒதுக்கீட்டில் அவர்கள் விரும்பிய கல்லூரி, பாடப்பிரிவினை தேர்வு செய்து ஒப்புதல் வழங்கியிருந்தனர். அவர்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணையை தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை குழு உறுதி செய்து வெளியிட்டுள்ளது.

அதில், விளையாட்டுப் பிரிவில் 277 மாணவர்களும், முன்னாள் ராணுவனத்தினரின் வாரிசுகள் 122 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 98 மாணவர்களும் என 497 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பிரிவினருக்கான 7,150 இடங்களில் 6,653 இடங்கள் காலியாக உள்ளன. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் காலியாக உள்ள இடங்கள் பொது கலந்தாய்விற்கு கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பொறியியல் தரவரிசை முதல் 10 இடங்கள் - மாநில பாடத்திட்டத்தில் பயின்ற ஒருவர் மட்டுமே தேர்ச்சி

ABOUT THE AUTHOR

...view details