தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர் கல்வித்துறை - be btech admission

TNEA
உயர் கல்வித்துறை

By

Published : Jul 25, 2021, 3:48 PM IST

Updated : Jul 25, 2021, 5:04 PM IST

15:45 July 25

பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் www.tneaonline.org or www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்பில் பி.இ., பி.டெக் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் நாளை முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதிவரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், "அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதிவரை வழங்கப்படும். மேலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வந்த பின்னர்தான் இளங்கலை முதலாமாண்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

பி.இ, பி.டெக். பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு www.tneaonline.org or www.tndte.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு உதவிடுவதற்காக பொறியியல் கல்லூரிகளில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன" என கூறியுள்ளார்.

மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்ற பின்னர் அவர்களுக்கான ரேண்டம் எண்களை ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிடுவதற்கு உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் நான்காம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7 முதல் கலந்தாய்வு

சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் ஏழாம் தேதி முதல் 11ஆம் தேதிவரையிலும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதிவரையிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கான துணை கலந்தாய்வு அக்டோபர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரையில் நடைபெறுகிறது. ஆதிதிராவிடர் அருந்ததியர் இட ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களில் ஆதிதிராவிடர் வகுப்பினர் சேர்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம், கலந்தாய்வு அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக" உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:

தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை?

Last Updated : Jul 25, 2021, 5:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details