தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலைமோதிய மக்களின் கூட்டம் - தி.நகர் மார்க்கெட் மூடல்! - தி.நகர் மார்க்கெட் மூடப்படுகிறது

சென்னை: சமூக விலகலை கடைப்பிடிக்காமல் மக்களின் கூட்டம் அலைமோதுவதால் தி.நகர் மார்க்கெட் வரும் 14ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

t nagar market
t nagar market

By

Published : Apr 6, 2020, 7:54 PM IST

சென்னை மாநகராட்சி சார்பில், கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகமாகக் கூடும் பல்பொருள் அங்காடி, காய்கறிச் சந்தை உள்ளிட்டவை நகரின் வெளியிடங்களுக்கு மாற்றப்பட்டன.

அதேபோன்று, தி.நகர் காய்கறிச் சந்தை தி.நகர் வெங்கட நாராயண சாலையில் உள்ள நடேசன் பூங்காவுக்கு எதிரே உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்துக்கு மாற்றப்பட்டது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், சந்தை மாற்றப்பட்டும் மக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

காவல்துறை வெளியிட்ட அறிக்கை

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக மக்கள் குவியத் தொடங்கினர். மற்றப் பகுதிகளைப் போன்று இல்லாமல் குறைந்த விலையில் இங்குக் காய்கறிகள் கிடைப்பதால், இந்தச் சந்தைக்கு மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

எனவே, வியாபாரிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறியதால் நோய் பரவலைத் தடுக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி, காவல்துறை அலுவலர்களும் இணைந்து நேற்று இந்த மார்க்கெட்டை முடக்கினர். இதனைத்தொடர்ந்து வரும் 14ஆம் தேதி வரை, தி.நகர் மார்க்கெட் நடைபெறாது என, காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவை மீறிய திமுகவினர் மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details