சென்னை திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர்(31). இவர் நாம் தமிழர் கட்சியின் நகர கிளை செயலாளராக இருந்துவருகிறார். நேற்று வீட்டின் அருகே அவர் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுதாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு - Naam thamizhar party
சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகியை அரிவாளால் வெட்டிய அடையாளம் தெரியாத கும்பலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
![திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3696812-thumbnail-3x2-oi.jpg)
சண்டையை தடுக்க வந்த சுதாகரின் தயாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுதாகரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கஞ்சா விற்பனை செய்வதை காட்டிக் கொடுத்ததால், அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்யும் நோக்குடன் சுதாகரை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.