தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வட்டார கல்வி அலுவலர் பணிக்கு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் வெளியீடு! - tn trb realeased Regional Education Officer posting

சென்னை: வட்டார கல்வி அலுவலர் பணிக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட தேர்வினை எழுதிய 42 ஆயிரத்து 686 தேர்வர்களின் மதிப்பெண்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னை
சென்னை

By

Published : Jan 27, 2021, 9:29 PM IST

Updated : Jan 27, 2021, 10:42 PM IST

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளிக்கல்வித்துறையில் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில் 2020 பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இந்த தேர்வினை 42 ஆயிரத்து 686 பேர் எழுதினர். இவர்களுக்கான உத்தேச விடை குறிப்புகள் 2020 பிப்ரவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த விடை குறிப்புகள் மீது தேர்வர்கள் சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வல்லுநர் குழு விடை குறிப்புகளை இறுதி செய்து வழங்கியது.

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் விடை குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களின் மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.


தேர்வு அறிவிப்பின்போது வெளியிடப்பட்ட விதிமுறைகள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இதுகுறித்து விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.



Last Updated : Jan 27, 2021, 10:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details