தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிளாம்பாக்கம் - சென்னை இடையே எவ்வளவு பேருந்துகள் இயக்க திட்டம்? - எம்டிசிக்கு போக்குவரத்து துறை கெடு விதிப்பு! - சென்னை

கிளாம்பாக்கம் - சென்னை இடையே எத்தனை வழித்தடங்களில், எவ்வளவு பேருந்துகள் இயக்க வேண்டும் என்பது குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

Kilambakkam new bus stand
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்

By

Published : May 24, 2023, 3:46 PM IST

சென்னை: சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பயணிகளின் நேரத்தை குறைக்கின்ற விதமாகவும் சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது சுமார் 393.74 கோடி செலவில் 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பிரமாண்டமாக தாயாராகி வருகிறது. ஆகையால் இந்த பேருந்து நிலையத்தை எதிர்பார்த்து சென்னை வாசிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாடும் காத்திருக்கிறது. இதற்கிடையில் அமைச்சர் சேகர்பாபு இப்பேருந்து நிலையம் மக்களின் அடிப்படை தேவையை கனக்கில் எடுக்காமல் கட்டுமானங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜூன் மாதம் இப்பேருந்து நிலையத்தை துவங்கினால் மக்களுக்கு தான் சிரமம். ஆகையால் ஜூலை மாத இறுதிக்குள் துவங்க ஏற்பாடு செய்யப்படும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சரின் இந்த தகவலைக் அறிந்த மக்கள் கடந்த 2 வருடமாக இப்போது துவங்கப்படும்... அப்போது துவக்கங்கப்படும் என காலம் கடத்திக் கொண்டே செல்கின்றனர் என மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, இப்போது இந்த புதிய பேருந்து நிலையம் இன்னும் ஓரிரு மாதங்களில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கும் சூழலில், சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும், வெளி மாவட்டத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரக்கூடிய பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கும் எத்தனை வழித்தடங்களில் பேருந்து இயக்க வேண்டும்.

மேலும் எவ்வளவு பேருந்துகள் இயக்க வேண்டும். எத்தனை முறை இயக்க வேண்டும் என்பது குறித்தான விரிவான அறிக்கையை இன்னும் 2 வாரங்களில் வழங்குமாறு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பழைய பேருந்துகளை மாற்றி விட்டு புதிதாக 1500 பேருந்துகள் வாங்கும் அறிவிப்பு வருகின்ற ஜூன் 2 ஆவது வாரத்தில் வெளியாகும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து முதலமைச்சரின் பதில் என்ன?: கள் இயக்க நல்லுசாமி கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details