சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 5ஆயிரத்து 679 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் புதிதாக 93 ஆயிரத்து 2 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த 5 ஆயிரத்து 671 நபர்களுக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த மூன்று நபர்களுக்கும், கர்நாடகா மற்றும் கேரளாவிலிருந்து வந்த தலா இரண்டு நபர்களுக்கும், ஜார்கண்டிலிருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம் 5 ஆயிரத்து 679 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் 67 லட்சத்து 677 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 370 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களில், 46 ஆயிரத்து 386 நபர்கள் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 5ஆயிரத்து 626 நபர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 13 ஆயிரத்து 836 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் பலனின்றி இன்று 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா மொத்த பாதிப்பு:
- திருச்சிராப்பள்ளி - 10083
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 924
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 941
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.