தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 82 ஆயிரத்து 666 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 2,332 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து தமிழ்நாடு வந்த இரண்டு நபர்களுக்கும், ஜார்கண்டிலிருந்து வந்த நான்கு நபர்களுக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த மூன்று பேருக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவருக்கும் என 2,342 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 91 லட்சத்து 88 ஆயிரத்து 473 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் எட்டு லட்சத்து 84 ஆயிரத்து 94 நபர்கள் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 14 ஆயிரத்து 846 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து இன்று (மார்ச் 30) 1,463 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்து 56 ஆயிரத்து 548 என உயர்ந்துள்ளது.
அதேபோல் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் ஒன்பது பேர், தனியார் மருத்துவமனையில் ஏழு பேர் என மொத்தம் 16 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் புதிதாக 874 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 242 பேருக்கும், கோயம்புத்தூரில் 207 பேருக்கும், தஞ்சாவூரில் 114 நபர்களுக்கும் காஞ்சிபுரத்தில் 100 நபர்களுக்கு எனத் தீநுண்மி தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களைத் தவிர பிற 26 மாவட்டங்களில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலும், ஐந்து மாவட்டங்களில் மூன்று இலக்கத்திலும் உள்ளன.
மாவட்டம் வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
சென்னை - 2,48,031
கோயம்புத்தூர் - 58,679
செங்கல்பட்டு - 56,073
திருவள்ளூர் - 45,920
சேலம் - 33,436
காஞ்சிபுரம் - 30,483
கடலூர் - 25,655
மதுரை - 21,778
வேலூர் - 21,455
திருவண்ணாமலை - 19,674
திருப்பூர் - 19,269
தஞ்சாவூர் - 19,636
தேனி - 17,291
கன்னியாகுமரி - 17,507
விருதுநகர் - 16,862
தூத்துக்குடி - 16,538
ராணிப்பேட்டை - 16,453
திருநெல்வேலி - 16,058
விழுப்புரம் - 15,485
திருச்சிராப்பள்ளி - 15,558
ஈரோடு - 15,316
புதுக்கோட்டை - 11,852
நாமக்கல் - 12,093
திண்டுக்கல் - 11,856
திருவாரூர் - 11,966
கள்ளக்குறிச்சி - 10,946
தென்காசி - 8,699
நாகப்பட்டினம் - 9,122
நீலகிரி - 8,648
கிருஷ்ணகிரி - 8,441
திருப்பத்தூர் - 7,799
சிவகங்கை - 6,983
ராமநாதபுரம் - 6,550
தர்மபுரி - 6,773
கரூர் - 5,639
அரியலூர் - 4,812
பெரம்பலூர் - 2,305
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 974
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,051
ரயில் மூலம் வந்தவர்கள் - 428