தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது சற்று குறையத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே 28) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 124 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 31 ஆயிரத்து 79 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குறையும் கரோனா! - தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
19:19 May 28
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மே.28) புதிதாக 31 ஆயிரத்து 079 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 12 ஆயிரத்து 386 என உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 65 லட்சத்து 67 ஆயிரத்து 897 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 20 லட்சத்து 9 ஆயிரத்து 700 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தி மையங்களில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் இன்று (மே 28) குணமடைந்து 31 ஆயிரத்து 255 பேர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 74 ஆயிரத்து 539 என அதிகரித்துள்ளது.
மேலும் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 224 பேர், அரசு மருத்துவமனையில் 262 பேர் என மொத்தம் 486 இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 775 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 2,762 பேரும் கோயம்புத்தூரில் 3,937 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாகத் தொற்று பாதிக்கப்பட்டவர்கள்
சென்னை - 4,96,706
செங்கல்பட்டு - 1,36,664
கோயம்புத்தூர் -1,59,762
திருவள்ளூர் - 98,445
சேலம் - 61,629
காஞ்சிபுரம் - 61,593
மதுரை - 62,603
கடலூர் - 46,720
திருச்சி - 53,854
திருப்பூர் - 56,354
தூத்துக்குடி - 45,789
திருநெல்வேலி - 42,067
வேலூர் - 40,958
தஞ்சாவூர் - 44,934
ஈரோடு - 51,401
கன்னியாகுமரி - 46,078
திருவண்ணாமலை - 39,588
தேனி - 34,784
ராணிப்பேட்டை - 33,280
விருதுநகர் - 35,880
விழுப்புரம் - 32,514
கிருஷ்ணகிரி - 31,296
நாமக்கல் - 29,544
திண்டுக்கல் - 25,980
திருவாரூர் - 28,093
நாகப்பட்டினம் - 27,089
புதுக்கோட்டை - 21,849
கள்ளக்குறிச்சி - 20,173
தென்காசி - 21,400
திருப்பத்தூர் - 21,541
நீலகிரி - 17,448
தர்மபுரி -17,617
ராமநாதபுரம் - 15,869
கரூர் - 15,744
சிவகங்கை - 13,814
அரியலூர் - 10,510
பெரம்பலூர் - 7,623
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1004
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1075
ரயில் மூலம் வந்தவர்கள் - 428