தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதன்படி இன்று ஒரேநாளில் 1,636 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 1,636 பேருக்குப் பாதிப்பு! - கரோனா அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 24) புதிதாக 1,636 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் இதுவரை எட்டு லட்சத்து 71 ஆயிரம் பேர் பாதிக்கப்படைந்துள்ளனர். தற்போதுவரை மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 9,746 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மேலும் இன்று 5 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை கரோனா தொற்றுக்கு ஒன்பதாயிரத்து 746 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் ஒரேநாளில் 633 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு அடைந்துள்ளனர். 1,023 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் எட்டு லட்சத்து 49 ஆயிரத்து 64 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.