தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டட விதி, சூரிய சக்தி கொள்கைகளை வெளியிட்டார் முதல்வர்! - எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கட்டட கொள்கை மற்றும் சூரியசக்தி கொள்கைகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட மின்துறை அமைச்சர் தங்கமணி பெற்றுக் கொண்டார்.

எடப்பாடி

By

Published : Feb 4, 2019, 8:21 PM IST

சென்னை தலைமை செயலகத்தில் 2019-ம் ஆண்டிற்கான கட்டட கொள்கை மற்றும் சூரிய சக்தி கொள்கைகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். இவை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாடு முகமையால் வெளியிடப்பட்டது.

சூரிய சக்தியில் 9000 மெகாவாட் மின்சாரத்தை எட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான பல்வேறு கொள்கைகள் கூறப்பட்டுள்ளது. சூரிய சக்திக் கொள்கை புத்தகத்தை முதல்வர் வெளியிட மின்துறை அமைச்சர் தங்கமணி பெற்றுக்கொண்டார்.

பின்னர், 2019 ம் ஆண்டின் கட்டட விதிகள் அடங்கிய கொள்கைப் புத்தகத்தை முதலமைச்சர் வெளியிட, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். பொதுமக்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான வீட்டு வசதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details