தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கான வாய்ப்புகள் குறித்து ஆன்லைன் மூலம் பயிற்சி! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான வாய்ப்புகள், மூலதன நிதி, கடன் உதவிகள் குறித்து இணைய வலைதளத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

industrial training webinar
industrial training webinar

By

Published : Aug 13, 2020, 5:18 AM IST

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், (www.editn.in) (தமிழ்நாடு அரசின் தன்னாட்சி நிறுவனம்) சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கிவருகிறது. தொழில் முனைவோர்களுக்காக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான வாய்ப்புகள், மூலதன நிதி, கடன் உதவிகள் குறித்து இணைய வலைதளத்தின் மூலம் இங்கு பயிற்சி நடைபெற உள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் இன்று (ஆக.13) காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளதால், தொழில் செய்துவரும் தொழில் முனைவோர்கள் வருகை தந்து பயன்பெறலாம்.

குறு, சிறு நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் இந்த பயிலரங்கில் கலந்துகொள்வதன் மூலமாக நிரூபிக்கப்பட்ட பயன்களை அளிக்கும். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.9444556099, 9444557654 www.editn.i (முன் பதிவு அவசியம்)

ABOUT THE AUTHOR

...view details