தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்றோர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை

சென்னை: மாணவர்களின் உடல் நிலையில் பெற்றோர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறை

By

Published : Jan 22, 2021, 12:13 PM IST

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அரசு வழிகாட்டு நெறிமுறைகள்படி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உடல் நலனில் முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே பள்ளிகளுக்கு அனுப்பலாம்.

சளி, தலைவலி போன்ற ஆரம்பக்கட்ட பாதிப்பு இருந்தாலும் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டாம். ஏதேனும் பாதிப்பு இருப்பின் உரிய மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பிறகு பள்ளிகளுக்கு அனுப்பலாம்.

நோய்த் தொற்று காலம் என்பதால் மிக கவனமுடன் பெற்றோர்கள் செயல்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதலா? விபரங்களை சேகரிக்கும் பள்ளிக்கல்வித்துறை!

ABOUT THE AUTHOR

...view details