இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், தொடக்கக்கல்வி இயக்குனர் சேதுராமவர்மா ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாராகவும், மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் பழனிச்சாமி தொடக்கக்கல்வி இயக்குனராகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் உமா மாநிலக் கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் பணியிடை மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள்
சென்னை: பள்ளிகல்வித்துறையில் பணியாற்றி வரும் இயக்குநர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
dpi
மேலும் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளர் ரோஸ் நிர்மலா கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என அதில் கூறியுள்ளார்.