சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 32 மாவட்ட கல்வி அலுவலகங்களின்கீழ் வரக்கூடிய அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உடனடியாக நிலுவையில் இருக்கும் ஊதியத்தை வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையில் நிர்வாக ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதனால் கூடுதலாக 32 கல்வி மாவட்டங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. நிர்வாக ரீதியாக செய்யப்பட்ட மாற்றங்களால் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வழங்க காலதாமதம் ஏற்பட்டது.