தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் பதவி உயர்வுக்கு விவரப் பட்டியல் கேட்டு சுற்றறிக்கை - School Education Department Circular

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களின் விவரங்கள் கேட்டு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

tn-school-education-department
tn-school-education-department

By

Published : May 24, 2020, 1:16 PM IST

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில், 50 விழுக்காடு பணியிடங்கள் பதவி மூப்பின் அடிப்படையில் ஆண்டுதோறும் நிரப்பப்படும்.

அதேபோல் வரும் கல்வியாண்டிலும் காலிப்பணியிடங்களை பதவி மூப்பின் மூலம் நிரப்புவதற்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் "தற்போது இடைநிலை ஆசிரியர்களாக உள்ளவர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் 01/06/2020 நிலவரப்படி அரசு உயர் மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பத் தகுதி வாய்ந்த பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் விவரங்கள் வேண்டும். அதில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஏற்கனவே ஆசிரியர் இல்லாமல் காலியாகயிருந்து ஒப்படைக்கப்பட்ட உபரி ஆசிரியர் பணியிடங்களை காலிப்பணியிடங்களாக கருதக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்கள் 200ஆக அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details