சென்னை:தமிழ்நாட்டில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அந்த அட்டவணையின்படி, 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 2023ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது.
இப்பொதுத்தேர்வுகளில் 27.30 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வுகள் 13.03.2023 அன்று தொடங்கி 03.04.2023 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 7,600 பள்ளிகளில் பயிலும் 880 லட்சம் பள்ளி மாணவர்கள் 3,169 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர். மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத் தேர்வுகள் 14.03.2023 அன்று தொடங்கி 05.04.2023 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 7,600 பள்ளிகளில் பயிலும் 8.50 லட்சம் பள்ளி மாணவர்கள் 3,169 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர்.