தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துபாயிலிருந்து சென்னை வரும் விமானங்கள்: முதன்மை செயலாளர் ஆய்வு! - Chennai Airport

சென்னை: ஊரடங்கில் முதல்முறையாக துபாயிலிருந்து 2 விமானங்கள் நாளை சென்னை வருவதையடுத்து, முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி விமான நிலையத்தில் ஆய்வு நடத்தினார்.

துபாயிலிருந்து சென்னை வரும் விமானங்கள்: முதன்மை செயலாளர் ஆய்வு!
துபாயிலிருந்து சென்னை வரும் விமானங்கள்: முதன்மை செயலாளர் ஆய்வு!

By

Published : May 8, 2020, 10:05 AM IST

Updated : May 8, 2020, 6:50 PM IST

நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதியிலிருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இந்தியர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்தியாவிற்கு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து நாளை துபாயிலிருந்து இரண்டு விமானங்களில் 400க்கும் மேற்பட்டவர்களை அழைத்துக்கொண்டு முதல் விமானம் சென்னை வர உள்ளது.

இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி தலைமையில் ஆய்வு நடந்தது.

இதில் விமானத்திலிருந்து வரும் பயணிகள் சுங்க மற்றும் குடியுரிமை சோதனைகள் முடிந்த பின்னர், உடமைகளுடன் வெளியே வரும் அனைவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய ரத்தம், சளி சோதனைக்காக எடுக்கப்படும்.

அதன் பின்னர் தயாராக இருக்கும் அரசு பஸ்களில் ஏற்றிக்கொண்டு தனியார் கல்லூரி மற்றும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். சோதனைகளில் தொற்று இருப்பது உறுதியானால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். தொற்று இல்லை என்றால் வீடுகளுக்கு தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க...தப்லீீகி ஜமாத்தினரை மீண்டும் கொண்டுவர தமிழக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்தது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Last Updated : May 8, 2020, 6:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details