சென்னை : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் பெண் தேர்வர்கள் 70 ஆயிரத்து 195 பேரும், ஆண் தேர்வர்கள் 67 ஆயிரத்து 804 தேர்வர்களும், 12 திருநங்கைகளும் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் 18 இணை இயக்குநர்களும், 530 கல்வித்துறை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 150 தேர்வு மையங்களில் கணினி மூலம் தேர்வு எழுதுகின்றனர்.
டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 15 பாடங்களுக்கு 5 நாட்கள் காலை ,மாலை நேரங்களில் 10 பிரிவுகளாக தேர்வு கணினி மூலம் நடத்தப்படுகிறது. டிசம்பர் 8 ந் தேதி 23 ஆயிரம் நபர்களும், 9 ந் தேதி 21 ஆயிரம் நபர்களும், 10 ந் தேதி 24 ஆயிரம் நபர்களும், 11 ந் தேதி 32 ஆயிரம் நபர்களும், 12 ந் தேதி 36 ஆயிரம் தேர்வர்களும் எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
34 மையங்களில் தேர்வு