தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவுரைப்படி பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக முதலாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று (31-5-2021) வெளியானது.
இந்தத் தேர்வுகள் கடந்த டிசம்பர் 2020, ஜனவரி 2021, பிப்ரவரி 2021 ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்டது. மொத்தம் 2,28,441 மாணவர்களில் 2,09,338 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.63 விழுக்காடு ஆகும். 18,529 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மேலும், 574 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.