கரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவசியமின்றி வெளியே சுற்றித்திரிபவர்களைக் கண்டித்து, காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துவந்தனர். இந்த நடவடிக்கையினால், தமிழ்நாடு முழுவதும் கடந்த 22 நாள்களில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 536 பேரை காவல் துறையினர் கைதுசெய்து, பிணையில் விடுவித்தனர்.
ஊரடங்கு மீறல்: 22 நாள்களில் 82 லட்சம் அபராதம் வசூல் - chennai news
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை மீறியதற்கு அபராதமாக, 22 நாள்களில் 82 லட்சத்து 32 ஆயிரத்து 644 ரூபாய் வசூலாகியுள்ளது.
ஊரடங்கு மீறல்...22 நாள்களில் 82 லட்சம் அபராதம் வசூல்!
ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 749 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போக்குவரத்துக் காவல் துறையினர், 82 லட்சத்து 32 ஆயிரத்து 644 ரூபாய் அபராதமாக வசூலித்தனர். ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 314 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியவர் கைது!