சென்னை : மாநகராட்சி முழுவதும் இதுவரை 27 ஆயிரத்து 398 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 279 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
corona
By
Published : Jun 11, 2020, 7:57 PM IST
தமிழ்நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிலுள்ள 77 ஆய்வகங்களில் இதுவரை ஆறு லட்சத்து 16 ஆயிரத்து 395 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், 38 ஆயிரத்து 716 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 456 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், இன்று மட்டும் ஆயிரத்து 875 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரத்து 659 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஆயிரத்து 372 பேர் குணமடைந்த நிலையில், அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக 20 ஆயிரத்து 705 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 23 பேர் இன்று கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 349ஆக உயர்ந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.