தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 7, 2020, 1:18 PM IST

ETV Bharat / state

தொகுதி பங்கீடு குறித்து அதிமுக, பாமக இடையே பேச்சுவார்த்தை

சென்னை: வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கான மறைமுகத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தலைமையகத்தில் அதிமுக, பாமகவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதிமுக, பாமக இடையே பேச்சுவார்த்தை
அதிமுக, பாமக இடையே பேச்சுவார்த்தை

தமிழ்நாட்டில் மாவட்ட ஊராட்சித் தலைவர் 27, மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் 27, மாவட்ட ஊராட்சி ஒன்றியத் தலைவர் 314, மாவட்ட ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் 314, கிராம ஊராட்சி துணைத்தலைவர் ஒன்பதாயிரத்து 624 ஆகிய ஐந்து பதிவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வரும் 11ஆம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து பேசுவதற்காக பாமக தலைவர் ஜிகே மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர்கள் ஏகே மூர்த்தி, வேலு ஆகியோர் அதிமுக தலைமையகம் வந்திருந்தனர்.

அதிமுக, பாமக இடையே பேச்சுவார்த்தை

அதனைத் தொடர்ந்து அவர்களை எம்.எல்.ஏ செம்மலை வரவேற்றார். பின்னர் பாமக தலைவர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

ABOUT THE AUTHOR

...view details