தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலை வாங்கித் தருவதாக மோசடி - முஸ்லீம் லீக் தலைவர் ஷேக்தாவூத் மீது புகார் - WORK

அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பலருக்கு வேலைவாங்கி தருவதா கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ள முஸ்லீம் லீக் தலைவர் ஷேக்தாவூத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது கட்சியை சேர்ந்தவர்களே புகார் தெரிவித்துள்ளனர்.

muslim

By

Published : Feb 6, 2019, 5:26 PM IST

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில முஸ்லீம் அமைப்புகளை சேர்ந்த முஸ்தபா கூறியதாவது,

தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக்தாவூத் அமமுகவை ஆதரித்து வந்த நிலையில், தற்போது அதிமுக-விற்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக கூறியுள்ளார். அதிமுக-வில் இணையவுள்ள இவர் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது கோபம் கொண்டு அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார். அவதூறு பரப்பியதை தொடர்ந்து அவர் மீது அமமுக சார்பாக தேனாம்பேட்டையில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பழனிச்சாமி என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 46 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். இதேபோல் பல்வேறு இடங்களில் பலரிடமும் பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்னர் திமுக ஆளும் கட்சியாக இருந்த நிலையில் இதேபோல், அரசு அலுவலகத்தில் இருக்கும் பலரையும் அவர் ஏமாற்றியுள்ளார் எனவும் தெரிகிறது. இந்நிலையில், அதிமுகவில் இணைவதாகவும், அதனால் தமக்கு எம்.பி. சீட்டு கிடைத்துவிடும் எனவும், தமிழக முதலமைச்சரை சந்தித்து இதுகுறித்து சமீபத்தில் பேசியதாகவும் பலரிடம் கூறி வருகிறார். மேலும் இதனை அவர் பலரை ஏமாற்றுவதற்கு ஒரு துருப்பு சீட்டாகவும் பயன்படுத்தி வருகிறார்.

இவ்வளவு குறைகளை வைத்துள்ள ஷேஷ்தாவூத் டிடிவி தினகரனை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்று கூறினார். மேலும் இதனை தொடர்ந்து ஷேஷ்தாவூத் மீது இஸ்லாமிய அமைப்புகள் புகார் கொடுக்கவுள்ளதாக முஸ்தபா தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details