தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னைக்கு வந்தடைந்தது ஜோலார்பேட்டை தண்ணீர்

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஜோலார்பேட்டையிலிருந்து தினசரி 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.

Velumani

By

Published : Jul 12, 2019, 8:30 PM IST

ஜோலார்பேட்டை மேட்டு சக்கர குப்பம் நீரேற்று நிலையத்திலிருந்து 10 மில்லியன் லிட்டர் குடிநீர் ரயில்வே வேகன்கள் மூலம் கொண்டு வரப்பட்டு இன்று காலை சென்னை வில்லிவாக்கத்தை வந்தடைந்தது.

இதனை அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின், கே.பாண்டியராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.66 கோடி நிதிச் செலவில், முதற்கட்டமாக 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் குடிநீர் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

சென்னைக்கு ரயில் மூலம் வந்த தண்ணீரை வரவேற்கும் அமைச்சர்கள்

இதனைத் தொடர்ந்து, ராட்சத குழாய்கள் மூலம் ரயில்களிலிருந்து கீழ்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் சென்றடைய அங்கு திறந்துவிடப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த திட்டத்தைப் போன்று பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும். 7,415 எம்எல்டி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள இந்த தண்ணீர் மூலம் 2,500 எல்.எல்.டி கூடுதலாக வழங்கப்படவுள்ளது.

சென்னை மாநகரின் கோடைக்கால குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழ்நாடு அரசால் மொத்தம் 7,33. 72 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்த நிலையில், சென்னை மக்களுக்கு தினசரி 5.25 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் இருந்து சென்னைக்கு நீர் எடுத்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details