சென்னை: தமிழ்நாடு தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா சைதாப்பேட்டையில் நேற்று(செப்.22) நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழ்நாடு அரசு பெண்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. திருமண நிதியுதவி 25 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படுகிறது.
பெண்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதை முதலமைச்சர் இலக்காக கொண்டுள்ளார்.