சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், ' திமுக ஆட்சிக் காலத்தில் தான் சாராயம் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகினர்.
மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களை விழிப்புணர்வு பிரசாாரத்தின் மூலம் தான் வெளிக்கொண்டு வர வேண்டும். அதற்கான நடவடிக்கையைத்தான் அரசு முழுமையாக செய்து கொண்டு வருகிறது. மதுக்கூடாது என்பது அரசின் ஒரே கொள்கையாகும். ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட்டால், அதன் விளைவாக கள்ளச்சாராயம் ஆறாக ஓடும்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் கள்ளச்சாராயம், டர்பைன்ட் ஆயில், ஸ்பிரிட் போன்றவற்றை குடித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். இதுவரை 2,000 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.