தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனவர் குடும்பங்களுக்கு ரூ. 5,000 மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் - ஜெயக்குமார் - Minister Jayakumar announces 5000 relief aid for fishers

சென்னை : அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ஐந்து ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

jayakumar
jayakumar

By

Published : May 1, 2020, 9:27 AM IST

இதுகுறித்து மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடடைமுறையில் உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ மக்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில், ஆண்டுதோறும், 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அனுசரிக்கப்படுகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மீன்பிடி தடைக்காலத்தில் மீனவ குடும்பம் ஒன்றுக்கு தலா ஐந்து ஆயிரம் ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது.

தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள கிழக்கு கடற்கரைப் பகுதியில் (திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி நகரம் வரை) உள்ள ஒவ்வொரு மீனவ குடும்பத்துக்கும் தலா ஐந்து ஆயிரம் ரூபாய் நேற்று (30.04.2020) முதல் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு வரும் ஜூன் 2020 முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்திற்கு நடப்பு ஆண்டில் 83 கோடியே 55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நான்கு கோடியே 31 லட்சம் மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக இதுவரை 43 கோடியே 10 லட்சம் ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் இதுவரை கரோனாவிலிருந்து 1,258 பேர் பூரண குணம்!

ABOUT THE AUTHOR

...view details