ஓபிஎஸ்-யுடன் சந்திப்பு நிறைவு: ஈபிஎஸ்-யுடன் ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள் - ஈபிஎஸ்-யுடன் ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள்
13:50 October 06
சென்னை: துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நிறைவடைந்த நிலையில், முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.
துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வதுடனான ஆலோசனைக்கு பின், கே.பி. முனுசாமி, தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி, பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று, அவரிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பதில் கருத்து முரண்பாடு நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.