தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் துரைக்கண்ணு
அமைச்சர் துரைக்கண்ணு

By

Published : Oct 29, 2020, 6:47 AM IST

கரோனா தொற்றால் உடல் நலக்குறைவு பாதிக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு முதலில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. நுரையீரலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை, தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக 24 மணி நேரமும் மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று வர விரும்புகிறேன் - மு.க. ஸ்டாலின் ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details