தமிழ்நாட்டில் கரோனா பரவலை தடுத்திட, கடந்த மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும், கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருப்பதால், புதிய கட்டுபாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து. அந்த புதிய கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு, இன்று(மே15) முதல் அமலுக்கு வருகிறது.
மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கடைகள் அனைத்தும் இன்றிலிருந்து காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனுமதி
- வீட்டில் இருந்து அருகே உள்ள கடைகளுக்கு செல்ல மட்டுமே அனுமதி.
- ஏற்கனவே அறிவித்துள்ளபடி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
- ATM, பெட்ரோல் பங்குகள், மெடிக்கல், நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல திறக்க அனுமதி
- இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை விநியோகிக்க காலை 6 முதல் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதி