இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு
15:00 May 17
சென்னை: தமிழ்நாட்டில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி கோவை, சேலம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி, உள்மாவட்டங்களில் இ-பாஸ் இன்றி பயணம் மேற்கொள்ளலாம், 12ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ளவர்களுக்கு விலக்கு உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும். 100 நாள் வேலைத்திட்டத்தில் 100 விழுக்காடு பணியாளர்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:‘மாற்றுத்திறனாளிகளுக்கு 81,000 சிறப்பு முகக்கவசங்கள் வழங்கப்படும்’ - தமிழ்நாடு அரசு