தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்களை மூன்றாகப் பிரித்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் வகை மூன்றில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் பொது போக்குவரத்துக்கும், படப்பிடிப்பிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்துக்கு அனுமதி:
- மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ ரயில் போக்குவரத்து, 50% பயணிகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.