தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்கா விவகாரம் தொடர்பாக திமுகவுக்கு புதிய நோட்டீஸ்? - assembly rights committee

சென்னை: குட்கா விவகாரம் தொடர்பாக, புதிதாக நோட்டீஸ் அனுப்புவது குறித்து நடைபெற்ற அவை உரிமைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சென்னை தலைமைச்செயலகம்
சென்னை தலைமைச்செயலகம்

By

Published : Sep 7, 2020, 6:38 PM IST

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துவந்த விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் இன்று (செப்டம்பர்7) அவை உரிமை மீறல் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் குமரகுரு, குணசேகரன், திமுக சார்பாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆஸ்டின், ரகுபதி ஆகியோர் பங்கேற்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா தாராளமாக கிடைப்பதாகக் கூறி, பேரவைக்கு எதிர்க்கட்சியினர் கொண்டு வந்தனர். இது தொடர்பாக அவை உரிமைக் குழு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து திமுக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உரிமைக்குழு பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்ததோடு, புதியதாக நோட்டீஸ் அனுப்பலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் அவை உரிமைக் குழு கூட்டம் நடைபெறுவதாக உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அக்குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குட்கா விவகாரம் தொடர்பாக புதிதாக நோட்டீஸ் அனுப்புவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:குட்கா ஊழல்: சம்பந்தப்பட்டவர்களை காக்கும் அறிவிக்கப்படாத கூட்டணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details