தமிழ்நாட்டி கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் ஏற்கனவே தொற்று இருந்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவிவருகிறது. இதனால் அதிக அளவில் ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மத்திய அரசு ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளித்தாலும் அதற்கு போதுமான இயந்திரங்கள் ஊரடங்கு உத்தரவால் உடனடியாக பெற முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் அங்குள்ள நுண்ணுயிர் துறையில் உள்ள ஆய்வங்களை பரிசோதனைக்காக வழங்கியுள்ளது. இதன்மூலம் அங்குள்ள இயந்திரங்களின் மூலம் வைரஸ் தொற்றினை எளிதில் கண்டறிய முடியும்.