கரோனா குறித்த புதிய விவரங்களை தெரிவிப்பதற்காக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், "தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்த எட்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எட்டு பேரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த எட்டு பேரில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட எட்டு பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 43 ஆயிரத்து 538 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ள நிலையில், மேலும் 40 ஆயிரம் படுக்கை வசதிகள் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.