தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து கவிதை வெளியிட்ட அமைச்சர் விஜய பாஸ்கர்! - tn health minister vijaya baskar wrote a poem

சென்னை: மக்கள் அனைவரும் ஊரடங்கு விதிகளை மதித்து வீட்டிலேயே  இருந்தால் கரோனா தொற்று அடங்கும் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கவிதை மூலம் தெரிவித்துள்ளார்.

tn health minister wrote a poem about corona spread control
tn health minister wrote a poem about corona spread control

By

Published : Jun 19, 2020, 2:08 PM IST

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டரில்,

"நமது அரசு முன்னின்று மக்களைக் காக்கும்..

நாங்கள் இருக்கிறோம்

போர்க்களத்தில் ...

மருத்துவப் பணியாளர்களாக

காவல்துறை வீரர்களாக

உங்களுக்காக

போராடுகிறோம்!

ஒத்துழைப்பு மட்டும் தந்து

நம்பிக்கையோடு

காத்திருங்கள்....

கொரோனாவை வீழ்த்துவோம். அஞ்சாத அயல்நாடுகளும்

திண்டாடி நடுங்கும்

கொடூரக் கொரோனா

திண்டாடி ஓடும் ....

விலகியிருந்து விழிப்புடன் இருந்து

வென்றிடுவோம் பெருந்தொற்று

அரக்கனை!

அஞ்சாதீர்கள்..நெஞ்சுரம் கொள்ளுங்கள் ..

முகக்கவசம் தரித்து

கைகளை சுத்தப்படுத்தி

அநாவசியம் தவிர்த்து

வீட்டிலிருங்கள் ..

அடங்கும் தொற்று!" எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details